இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நரேன் சமீபத்திய பேட்டியில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘கமல் சாரை பார்த்து தான் சினமா நடிக்கணும் என்று ஆசைப்பட்டேன்.. விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியான பிறகு தான் படத்தில் நடிக்கவுள்ளேன் என எனக்கு தெரிந்தது… விக்ரம் டீசர் பார்த்துவிட்டு லோகேஷ் சாருக்கு கால் செய்து.. டீசர் பயங்கரமா இருக்கு சார்-னு சொன்னேன்… அதுக்கு லோகேஷ் .. சார் நீங்களும் படத்தில் இருக்கீங்க என சொன்னார்…அந்த நிமிடம் எனக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது…
சிறிய வயதில் இருந்து நான் தீவிர கமல் சார் ரசிகன்… இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்… விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் கமல்சார் என்னிடம் கேள்வி கேப்பார் அப்போது நான் அதற்கு பதிலளிக்க அவரை பார்க்கவேண்டும்…நான் அவரை பார்த்து அந்த வசனத்தை சொல்ல போறேன் கமல் சார் என்னை பார்த்தவுடன் பயந்துட்டேன்.
உடனே லோகேஷ் சார் இந்த அளவிற்கு பயந்து நடிக்க வேண்டாம்.. என கூறினார்… அதற்கு நான் அது நடிக்கல உண்மையாகவே எனக்கு பயம் வந்துவிட்டது என கூறினேன்” என்று நரேன் கூறியுள்ளார். மேலும் பேசிய நரேன் விக்ரம் படம் கமல் சாருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.