விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார். கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை கரம் பிடிக்க முயற்சித்து வருகின்றார். பாக்யாவை விவாகரத்து செய்யும் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் கோபி மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், “விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் பிசியோதெரபிஸ்ட்களை மிகவும் மோசமாக சித்தரிக்கின்றனர். எனவே, இயக்குனர் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.