முன்னதாக செல்வராகவனை பிரபல நடிகை அவமானப்படுத்திய சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
செல்வராகவன் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சினிமாத்துறையில் அவர் சந்தித்த அவமானத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 80களில் முன்னணி நடிகையாக இருந்த வைஜெயந்தி மாலா தனது மகனை திரைத்துறையில் அறிமுகமாக்க முடிவு செய்திருந்தார். இதற்காக நல்ல கதையை எதிர்பார்த்து இருந்தார். அப்போது வைஜெயந்தி மாலாவின் வீட்டிற்கு செல்வராகவன் சென்றுள்ளார். ஆனால், வைஜெயந்தி மாலா கதையைக்கூட கேட்காமல் அவரை அவமானப்படுத்தி உள்ளார். இதனால், மனமுடைந்து போனார் செல்வராகவன்.
இதையடுத்து, தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்து தனுஷ் மற்றும் செல்வராகவனுக்கு திரைத்துறையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தை அடுத்து 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற தரமான படங்களை இயக்கினார்.
செல்வராகவன் உச்ச இயக்குநராக மாறியதை அடுத்து, வைஜெயந்தி மாலா மீண்டும் அவரை தொடர்பு கொண்டு தனது மகனை வைத்து படத்தை இயக்குமாரு கேட்டுள்ளார். அதற்கு செல்வராகன் மறுத்துவிட்டாராம். காதல் கொண்டேன் என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற தனுஷின் ஆக்ரோஷமான நடிப்பு ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.