சட்டமன்றத்தில் 375.25 கோடி ரூபாய் காண திட்டங்களுக்கு அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு தொகுதியின் தேவைகளை எடுத்துக் கூறி நிறைவேற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலம் மற்று,விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் கைத்தறி துறைமானிய கோரிக்கையின் மீது ஜெயங்கொண்டம் தி.மு.க எம்எல்ஏ கண்ணன் பேசுகையில்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கோரிக்கைகள் உடையார்பாளையம் வருவாய் வட்டத்தை பிரித்து, தா பழூரை, தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். கொள்ளிடத்திலிருந்து பொன்னேரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஆகிய பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.ஆண்டிமடம் புதிய தாலுக்காவாக உள்ளதால், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கும்பகோணம் – ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம் வரை புதிய அகல இரயில்பாதை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.கைத்தறி மற்றும் துணிநூல் துறை கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200-ல் இருந்து 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெவாளர்களுக்கு 750-ல் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கிய முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அரகம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கிய நெசவாளர்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஓதியத்தை 1000-ல் இருந்து 1500 – ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 30 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் 26-சங்கங்கள் எனது ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ளது. அலுலவலர்கள் மற்றும் நெசவாளர்களின் நிர்வாக வாதிக்காக. ஜெயங்கொண்டம் நகரில் கைதரித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தொடங்க ண்டும். செங்குந்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். நெசவாளர்கள் நெய்த புடவைகளை “கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து, ஆந்திர மாநிலம் “ஆப்-கோ” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விற்பனை செய்ய வேண்டும். சயனடிக் ஹாக்கி கிரவுண்ட் செயற்கை இழை ஹாக்கி மைதானம் அரியலூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.ஹாண்ட் பால் கிரவுண்ட்மாவட்ட மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கைப்பந்து மைதானம் தேவைப்படுகிறது. இந்த விளையாட்டிற்கு விளையாட்டு விடுதி மாணவர்கள் இருப்பதால் மைதானம் தேவைப்படுகிறது..க்ஷஜெயங்கொண்டம் மி ஸ்டேடியம் 2013 ஆம் ஆண்டு 22 இலட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. அதை சீரமைப்பதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மினி ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள (3கோடி ரூபாய்) நிதியினை பயன்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
அக்கா மெடேஷன் சென்டர் மாவட்ட அளவில் அளவில் பயிற்சி முகாம்கள் நடைபெறும் பொழுது மாணவர், மாணவிகள் தங்குவதற்கு, தங்கும் விடுதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு விடுதி பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பலர்செலவு செய்ய இயலாத குடும்ப சூழ்நிலையில் உள்ளவர்களை, கண்டறிந்து அரசு ஊக்குவித்து, பயிற்சிகள் வழங்க வேண்டும் இதன் மூலம் தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம். யோகா போன்றவற்றை துவக்கப்பள்ளி நிலையிலிருந்தே துவங்க வேண்டும்.
மாணவர்கள் கையடக்க செல்பேசியிலிருந்து மூழ்கி உடற்பயிற்சியை மறந்து, ஆன்லைன் கேம்மின் விளையாடி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இந்த நிலையை மாற்றி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும். என்று மாண்புமிகு முதல்வருக்கு கோரிக்கை விடுப்பதுடன். அதே சமயம் எனது ஜெயங்கொண்டம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் 10 ஏரிகளை மேம்பாடு 9.60கோடி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 3.80 கோடி, பேவர்பிளாக் சாலை – 298 கோடி,பூங்கா அமைத்தல் 1.34 கோடி, கூடுதல் புதிய பேருந்து நிலையம் அமைக்க 2.25கோடி, கூடுதல் 19.97 கோடி உடையார்பாளையம் பேரூராட்சியில் சந்தை மேம்பாடு 2.70 கோடி.,ஏரி சீரமைத்தல் 26.00 இலட்சம்.,பேவர்பிளாக் சாலை 1.75கோடி.தார்சாலை மேம்பாடு 55.50 லட்சம். பூங்கா அமைத்தல் 24.20 லட்சம்.கூடுதல் – ரூ.5.50 கோடி. வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பேவர்பிளாக் சாலை அமைத்தல் – ரூ. 60.00 இலட்சம்.ஏரிகளை மேம்பாடு செய்யும் பணி 1.03.கோடி.ஆக மொத்தம் ஜெயங்கொண்டம் தொகுதியில் 375.25 கோடி ரூபாய்க்கு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வரு க்கு நன்றி தெரிவித்து க்கொள்கிறேன் என்று கூறினார்.
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]