ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.