அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
விருதுநகர் மத்திய மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகம், விருதுநகர் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவர் தர்மராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலாஜி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயக்கொடி, விருதுநகர் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் சங்கர், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய மகளிரணி செயலாளர் ராசாத்தி, ஒன்றிய இணைச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் பாண்டி, தொழிற்சங்க செயலாளர் முரளி, ஒன்றிய மீணவரணி செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய வர்த்தக பிரிவு செயலாளர் ஆறுமுகம், ஆமத்தூர் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, வி. முத்துலிங்காபுரம் ஊராட்சி செயலாளர் கார்த்திக், பட்டம்புதூர் ஊராட்சி செயலாளர் இசக்கிமுத்து, விருதுநகர் கிழக்கு ஒன்றியம் அப்பநாயக்கன்பட்டி மாரிமுத்து, சத்திரெட்டியாபட்டி கிளை செயலாளர் மகாலிங்கம், விருதுநகர் நகர 1வது வார்டு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 10வது வார்டு செயலாளர் கார்த்திகேயன், 18-வது வார்டு செயலாளர் நாகூர்சுல்தான், 17வது வார்டு செயலாளர் அமீதுஅப்பாஸ், 34-வது வார்டு செயலாளர் ஜெயக்கொடி, 24வது வார்டு செயலாளர் மோகன்ராஜ், 12வது வார்டு செயலாளர் ஜெயச்சந்திரன், 28 வார்டு செயலாளர் கௌதம் உட்பட ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அக்கட்சியிலிருந்து விலகி விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் நகரக் கழகச் செயலாளர் நைனார் முஹம்மது, நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் வெங்கடேஷ், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், சிவகாசி நகர முன்னாள் அவைத் தலைவர் ரஜித்பாலாஜி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சீனிவாசபெருமாள், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாரிக்கனி உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.