• Fri. Apr 26th, 2024

இந்தியாவிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும்- ஆய்வாளர் எச்சரிக்கை

ByA.Tamilselvan

Feb 9, 2023

துருக்கி மற்றும் சிரியாவை போன்று இந்தியாவிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நெதர்லாந்து ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த நாடே உருகுலைந்து போயுள்ளன. . இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. இதில், துருக்கியில் 12,391 பேரும், சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை அது ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் என்பதை நெதர்லாந்து ஆய்வாளர் ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் கணித்திருந்தார். இந்நிலையில், அவர் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நில அதிர்வுகள் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *