சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சரவணனை மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி தொடர வேண்டும், 48- வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் அந்தந்தப் பகுதிகளின் மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை இனிவரும் காலங்களில் அந்தந்த பகுதிகளின் மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும் திமுக ஆட்சியின் போது மக்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள பலமுறை வலியுறுத்தியும் தயக்கம் காட்டிய அதிகாரிகள் தற்போது துரிதமாக செயல்படுவது ஏன் என ஆணையாளர் சரவணன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தினர் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்து மக்கள் வளர்ச்சிப் பணிகளில் தலையிட்டதால் ஆணையாளருடனான சந்திப்பு நிகழ்ந்ததாக மேயர் மற்றும் துணை மேயர் தரப்பிலான திமுகவினர் தெரிவித்த நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் சிவகாசி மாநகராட்சிக்கு 9- கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளை விரைவில் தொடர வேண்டுமெனவும், அதே போன்று சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 800- கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதில் பணிகள் நடைபெற்று முடி வுரும் தருவாயி லுள்ள சுற்றுவட்டச் சாலை, மற்றும் நான்கு வழி சாலை பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.



