திருவள்ளூர் மாவட்டம் ஆண்டிக்குப்பம் பகுதியில் இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக ஆண்டிக்குப்பம் மீனவர்களிடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சூறையாடப்பட்டு, 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஒரு தரப்பில் 6 பேர் மீதும், மற்றொரு தரப்பில் 38 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர் நேற்று ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அமைதி திரும்பும் வரையில் பழவேற்காடு ஏரியில் இரு தரப்பினர் உட்பட யாரும் மீன் பிடிக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.