• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விடை பெற்றார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!!

ByA.Tamilselvan

Sep 24, 2022

கடைசி போட்டியில் தோல்வி அடைந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடினார். உலக அணியில் இடம் பெற்றிருந்த ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜாக் சாக் இணையுடன் மோதினார்.
இந்த போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ – ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார். போட்டியை தொடர்ந்து பேசிய பெடரர், இது ஒரு அற்புதமான நாள், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எந்த வருத்தமும் இல்லை என்று கூறினார். ரசிகர்கள் பலரும் அவரது அடுத்த செயல்பாடுகளுக்காக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை சிறப்பாக விளையாடியதற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.