இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ்க்கு சர்வதேச அளவில் மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு முறை பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தேஜ்ஸ் விமானம் வாங்குவது குறித்து அந்நாடு ஆர்வம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேஜஸை வாங்க மலேசியா,பிலிபைனஸ்,இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.