• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

காங்கிரசிடம் இருந்து விடுதலையானார் குலாம் நபி ஆசாத் – ஜோதிராதித்யா சிந்தியா !!

ByA.Tamilselvan

Aug 27, 2022

காங்கிரசிடம் இருந்து விடுதலையானார் குலாம் நபி ஆசாத் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கருத்து
காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரசில் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாக வெளியே தெரிகிறது என்றார். மூத்த தலைவரான ஆசாத், காங்கிரசுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக் கொண்டு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.