• Wed. Jan 22nd, 2025

அமைச்சர்கள் பயணிக்கவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

Byகுமார்

Mar 5, 2022

முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் ஐ பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்து இருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் மதியம் 2 மணி அளவில் புறப்பட இருந்த நிலையில் விமானம் ஓடுபாதையில் இருந்து பறக்க இருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமானது.

இதனால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் 2 மணி நேரத்திற்குப் பிறகு மூன்று அமைச்சர்களும் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறினர். வெளியே வந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் வெளியே வந்ததாகும் வேறு எதுவும் பிரச்சினை இல்லை என்றும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். நல்லவேளை எங்கள கீழே இறக்கி விட்டாங்க என்று செய்தியாளர்களிடம் நகைப்பை ஏற்படுத்தினார் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.