• Sat. Apr 20th, 2024

அதிமுகவிலிருந்து ஓ..ராஜா நீக்கம்…அடுத்த டார்கெட் மா.செ சையது கான்?..சாட்டையை சுழற்றிய எடப்பாடி

ஆளும் கட்சி திமுகவில இருந்து அப்டேட் செய்தி வருதோ இல்லையே நாளுக்கு நாள் அதிமுகவில இருந்து அப்டேட் வந்துட்டே இருக்கு. அந்த சுட சுட அப்டேட் என்னனு தான கேக்குறீங்க

நேத்து மாலை திருசெந்தூரில் சசிகலாவை அவர் தங்கிருந்த ஹோட்டலுக்கே போய் சந்திச்சு 20 பேசிருக்காரு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடைய தம்பி ஓ.ராஜா.

சசிகலாவை சந்திச்ச சந்தோசம் முடியுறதுக்குள்ள அடுத்த அதிர்ச்சி செய்தி அவருக்கு வந்துருக்கு.

அட ஆமாங்க அவர தான் இப்போ கட்சி இருந்து அதிரடியா நீக்கி அதிமுக தலைமை உத்தரவு போட்டுருக்கு.

சரி உண்மையாவே சசிகலாவை ஓ..ராஜா சந்திச்சதுக்கு தான் கட்சியில இருந்து நீக்குனான்களானு கேட்டா, இல்லைனு தான்

சொல்லணும். ஏன்னா ஏற்கனவே டிடிவி தினகரன் கல்யாணத்துல சசிகலா கலந்து கொண்டப்ப ஓ.ராஜாவும் சந்திச்சுட்டு தான் வந்துருக்காரு. அதுனால சந்திச்சது மட்டும் காரணம் இல்ல, கூடவே இன்னொரு காரணமும் இருக்கு.

அதாவது இரண்டு நாட்களுக்கு முன்னாடி தேனியில ஓ.பன்னீர்செல்வத்துடைய பண்னை வீட்டுல அதிமுகவில சசிகலா , டிடிவி தினகரனை இணைக்கனும்னு தேனி மாவட்ட செயலாளர் தலைமையில ஒரு தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தது உங்களுக்கு நியாபகம் இருக்கும். அந்த தீர்மானத்துக்கு அடித்தளம் போட்டதே ஓ,.ராஜா தான். இத அவரே பேட்டியும் கொடுத்து இருக்காரு.

அவர் கொடுத்த பேட்டியில நான் இதுக்கான ஏற்பாடுகளை செய்துட்டு இருக்கேன்.சசிகலா கண்டிப்பாக அதிமுகவுக்கு வரணும், தேனி விருதுநகர்னு எல்லா ஊருலயும் தீர்மானம் அடுத்தடுத்து நிறைவேற்ற இருக்காங்கனும் அவர் சொல்லிருந்தாரு.

இதுக்கு அடுத்து தான் சசிகலாவை சந்திச்சு பேசிருக்காரு. கட்சியை மீறி நடந்துகிட்டதால தான் அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துருக்குனு கட்சிகாரங்க சொல்றாங்க.

அதுமட்டும் இல்லாம இப்படி ஒவ்வொருத்தரா கிளம்புனா எனகென்ன மரியாதை இருக்குனு சாட்டைய கையில எடுத்துருக்காரு எடப்பாடி பழனிச்சாமி. ஆனா சமரசம் இல்லாம ஒருங்கிணைப்பாளர் தம்பினு கூட பார்க்காம இப்படி அதிரடில இறங்கிருக்குற எடப்பாடிய பாத்து மற்ற தலைவர்களும் நமக்கு எதுக்கு வம்புனு சைலண்ட்மோடுக்கு போயிட்டாங்கலாம்.

அது மட்டும் இல்லாம ஓ.பன்னீர்செல்வத்தோட தம்பி ஓ.ராஜாவுக்கு இந்த நிலைமைனா தீர்மானம் எல்லாம் போட்டு கொடுத்த நம்ம நிலைமை என்ன ஆகும் கலக்கத்துல தேனி மாவட்ட செயலாளர் சையது கானும், அவரோட ஆதரவளர்களும் இருக்காங்கலாம்.

அதிமுக தலைமையோட Danger zone லிஸ்ட்ல அடுத்து சையது கான் பேரும் இருக்குமோனு கட்சி வட்டாரத்துல தகவல். கட்சிய விட்டு நீக்குன ஓ.ராஜாவும் இரட்டை தலைமை எல்லாம் சரி பட்டு வராது , ஓபிஎஸ் இபிஎஸ் ரெண்டு பேரும் இரட்டை குழல் துப்பாக்கியெல்லாம் கிடயாது , வெறும் தீபாவளி துப்பாக்கி தான். அதுனால சசிகலா அதிமுகவுக்கு வரனும்.அவுங்க வந்தா தான் கட்சி ஒரு எழுச்சிய சந்திக்கும்னு காட்டமா பேசியிருக்காரு.

இனி இந்த பிரச்சனை இதோட முடிய போகிறது இல்ல..விரைவில் பொதுக்குழு கூடும்னு எதிர்பார்க்கலாம்.யாரும் பார்க்காத சண்டை எல்லாம் அங்க நடக்கும். ஒத்தையானு இரட்டையா பொதுக்குழுவுல தெரியும்னு எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *