

+2 மற்றும் டிகிரி படித்த அனைவருக்கும் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
“தமிழக அரசின் புதிய திட்டம் – வீடு தேடிக் கல்வி திட்டம்” மூலம் வீட்டிலிருந்தபடியே தன்னார்வலராக பணிபுரியலாம். பணி புரியும் நேரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை தான். வீட்டில் இருந்தே இந்த பணியினை செய்யலாம்.
இதற்கு உங்கள் பகுதியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்பு 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் கிடையாது, ஊக்கத்தொகையாக ரூ.1000/- வழங்கப்படும். பதவியின் பெயர் தன்னார்வலர். தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டப்படுவார்கள். இந்த நற்சான்று வைத்திருப்பவர்களுக்கு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசு வேலை வாய்ப்புகள் அமையும் தருணத்தில் கிரேஸ் மார்க் வழங்கி முன்னுரிமையும் வழங்கப்படும்.
மேலும், இந்த வேலையில் சேர இடைத்தரகர்கள் இல்லை. ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
http://illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே அல்லது உங்கள் பகுதி பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
