• Fri. Sep 29th, 2023

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு…

Byமதி

Oct 28, 2021

தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொத்து கணக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின் முழு பராமரிப்பில் அரசு பள்ளிகள் செயல்படுவதுபோல, அரசின் உதவி பெறும் தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரம் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவரும் தங்களது சொத்து கணக்கு விவரம் மற்றும் கடன் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டுமென தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி, சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *