• Thu. Apr 25th, 2024

தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!

Byவிஷா

Mar 30, 2023

தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் மோனிஷ் என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாயார் தமிழ் ஆசிரியை என்பதால் சிறு வயதிலேயே எளிதாக தமிழ் பாடத்தை நன்கு கற்க தொடங்கினார். இதன் விளைவாக இலக்கியத்தின் மேல் அதிக ஆர்வம் மாணவனுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பாடம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட 3 உலக சாதனையும் குழுவாக சேர்ந்து 2 உலக சாதனையிலும் இடம்பிடித்துள்ளார்.
இதில் பஃபீனிக்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் குறிஞ்சி பாட்டில் கபிலர் பாடிய 99 பூக்களின் பெயரை, கணித பாடத்தில் கணிதம் எழுதிக்கொண்டே 36 வினாடியிலும், எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களை சாக்பீஸால் தமிழ் வடிவத்தில் அடுக்கிகொண்டும், 100 கௌரவர்களின் பெயரையும் மிக குறைவான நேரத்தில் சொல்லியும் கலாம் புக் ஆஃப் வேர்ல்ட்ஸ் ரெக்கார்டிலுப் உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மேலும், இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் குழுவாக சேர்ந்து திருக்குறள் சொல்லியும், மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்டிலும் உலக சாதனைகளை செய்து அசத்தியுள்ளார் பள்ளி மாணவன் மோனிஷ்.
மேலும், தமிழ்நாடு அரசு ஓராண்டு விளக்க புகைப்பட கண்காட்சி கலை நிகழ்வு விழாவில் ஏராளமான பொதுமக்கள் மத்தியில் 36 வினாடியில் 100 பூக்களின் பெயரை அங்கும் சொல்லி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மற்ற பாடத்திலும் நல்ல மதிப்பெண்களை பெற்று வரும் இவர், தமிழ் பாடத்தில் எப்போதும் 98, 99 மதிப்பெண் வரை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து இவரின் தாயார் ஷர்மிளா ரமேஷ் கூறுகையில்..,
நான் தமிழ் ஆசிரியை என்பதால் மட்டுமல்ல என் பையனுக்கு தமிழ் மீது என்னமோ தெரியவில்லை அவ்வளவு பற்று, இதற்கு முக்கிய காரணமான தஞ்சாவூர் மானசா அகாடமி என் மகனின் திறமையை கண்டறிந்து, இந்த சிறு வயதிலேயே கிட்டத்தட்ட ஐந்து உலக சாதனையை இடம் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்ற வார்த்தை இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *