• Wed. Apr 24th, 2024

மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்

Byp Kumar

Mar 30, 2023

மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நறுங்கடம்பு நூல் ஆசிரியர் கார்த்திகேயன் வருகை புரிந்து பள்ளி வளாகத்தில் உள்ள வேம்பு, புங்கை, தேன்காய் ,ஆவிமரம், வாகை, கொடிக்கால், வெப்பாலை, யானை குன்றிமணி, நெட்டிலிங்கம், குமிழ் தேக்கு, செம்மந்தாரை, பனை, தென்னை, இயல்வாகை, செங்கத்தாரி, மருதாணி, மரமல்லி, புன்னை, மகாகனி, பூவரசு, நாவல் ஆகிய மரங்கள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும், மண்ணின் மரங்கள் எவை? அந்நிய மரங்கள் எவை? எத்தகைய மரங்களை நட வேண்டும்? மரத்தின் பெயரினை எவ்வாறு அடையாளம் காண்பது? என முழுமையாக விளக்கினார்.

‌ மரங்களைப் பற்றிய வினாடி வினா விடைபெற்றது. சரியாக விடை அளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மரங்கள் பற்றிய கவிதை வாசிக்கப்பட்டது. ஆசிரியை அனுசியா தொகுத்து வழங்கினார். ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அருவகம், சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுமதி ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *