சிந்தனைத்துளிகள்
புத்தரின் சிந்தனை துளிகள்….
மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.
பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள்.
யாரையும் புறம் பேசாதீர்கள். பேச்சைக் குறைத்து மனதை நிலைப்படுத்துங்கள்.
மனிதன் பெற வேண்டிய பெரிய பொக்கிஷம் அறிவு மட்டுமே. அழகு, செல்வம் இவை எல்லாம் நிலையற்றவை.
விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.
பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பாகும்.
திறந்த மனது என்றாலும்கூட அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்
முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும்……
பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்.
மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்
எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது
எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது
மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை
மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்