• Sat. Apr 20th, 2024

தஞ்சை விபத்து- சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

ByA.Tamilselvan

Apr 27, 2022

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தஞ்சை விபத்துக்கு முதல்வர்,பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல்தலைவர் கள் தமதுஇரங்கலை தெரிவித்துள்ளனர்.தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து சம்பவம் அறிந்து மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடுபங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்று கூறினார்.
இதனையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறும் வேண்டினார். இதனையடுத்து அவையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *