• Tue. Feb 18th, 2025

தமிழக அரசின் ஏமாற்று வித்தை

ByG.Suresh

Jan 12, 2025

ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த குழு அமைக்கப்படும் என்பது தமிழக அரசின் ஏமாற்று வித்தை. 22 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர், கூட்டணி மாநில பொது செயலாளர் மயில் பேட்டியளித்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டனியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர், செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த மாநில பொது செயலாளர் மயில் சட்டமன்ற கூட்டத்தில் ஒருங்கினைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு தமிழக அரசின் ஏமாற்று வேலை என்றும் அது கண்டனத்துக்குரியது என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

காளையார் கோவிலில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுகூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. மாநில தலைவர் மணிமேகலை, மாநில பொது செயலாளர் மயில், மாநில பொருளாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றதுடன் ஆசிரியர்கள் ஏராளமானோரும் அரசு ஊழிய சங்கத்தினர்களும் பங்கேற்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொது செயலாளர் மயில் பேட்டியளிக்கையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் வழி காட்டுதலின் படி ஒருங்கினைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது அரசின் ஏமாற்று வேலை என்றும் இது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்ததுடன் 4 ஆண்டுகளாக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதியை களைய வேண்டும் என்றும், பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினை பறிக்கும் அரசானை 243 ஐ ரத்து செய்திட வேண்டும் என்றும் பேட்டியளித்ததுடன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவ்ற்றை மீண்டும் வழங்கிட வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்ததுடன் இது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சென்னையில் தோழமை சங்கங்களை இனைத்து உண்ணாவிரத போராட்டம் போவதாகவும், அதனை தொடர்ந்து பல்வேறு தொடர் போராட்டஙகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.