

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் அமைந்துள்ள மாண்போர்ட் பள்ளியில் 11ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் டாக்டர் செல்வ சுரபி, “ஜோ” படத்தின் நடிகர் ரியோராஜ், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேசியஸ் தாஸ் ஆகியோர் தலைமையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


அதில் தொலை தொடர்பு ஊடகங்கள் பயன்பாட்டினை இளம் தலைமுறையினர் அளவோடு பயன்படுத்த அறிவுறுத்தியும் A1 தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய தலைமுறையினர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் குறித்தும் தை திருநாளை வரவேற்ற விதமும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்திய ராணுவத்தில் மகளிர் பங்களிப்பை பற்றி எடுத்துரைத்த நாடகம் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் கண்டு களித்தனர்.




