• Mon. Apr 21st, 2025

சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா…

ByG.Suresh

Jan 13, 2025

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிச் செயலர் ஏ எம் சேகர் தலைமை வகித்து மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை ஊட்டவும் தமிழரின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது என பொங்கல் திருநாளின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் வாழ்த்துக்களை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மற்றும் மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை முத்து பஞ்சவர்ணம் உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன் பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர் மகரஜோதி சக்திவேல் ஜெயமணி பாண்டி செல்வி மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.