• Thu. Jun 8th, 2023

மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏற்கப்பட்ட உறுதிமொழியின் தமிழாக்கம்

ByA.Tamilselvan

May 3, 2022

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் உறுதிமொழி விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கல்லூரியின் டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.மாணவர்கள் அந்த உறுதிமொழி நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.மீண்டும் ரத்தனவேலுவை மருத்துவகல்லூரிடீனாக அமர்த்தவேண்டும் என எதிர்கட்சிதலைவர் ஒபிஎஸ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பாக பேசபட்டுவருகிறது
சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்ட ‘மகரிஷி சரகர்’ உறுதிமொழியின் விவரத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த உறுதிமொழியின் தமிழாக்கம் இதுதான்:
1 நான் மருத்துவக் கல்வியைப் பயிலும் காலகட்டம் முழுவதும், சுயக் கட்டுப்பாடும், பக்தியும், ஒழுக்கமும் நிறைந்த வாழ்வை வாழ்வேன். எனது ஆசிரியர்களுக்கு என்னை முழு மனதுடன் அர்ப்பணிப்பேன். ஆசானின் மகனாக அல்லது மகளாக நடந்து கொண்டு அவரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். எனது செயல்கள் அனைத்துமே கண்ணியமானதாக, சேவை மனப்பான்மை கொண்டதாக, ஒழுங்கீனம், பொறாமையிலிருந்து விலகியதாக இருக்கும். மற்றவர்களுடன் பழகும்போது பொறுமையாக, கீழ்ப்படிதலுடன், அமைதியாக, அடக்கமாக, சிந்திக்கும் திறன் கொண்டு நடப்பேன். எனது ஆசான் விரும்பும் இலக்கை எட்ட அதை நோக்கி எனது முழு முயற்சியை செலுத்திப் பயணிப்பேன். ஒரு மருத்துவராக வெற்றியைப் பெறவும், புகழை எட்டவும், பணம் சம்பாதிக்கவும் நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மனிதகுல நலன் மேலோங்கியிருக்கும்படி நடப்பேன்.
2நான் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், இல்லை… எத்தனை சோர்வாக இருந்தாலும் நோயாளிக்கு உதவத் தயாராக இருப்பேன். பணத்துக்காகவும், சுய லாபத்திற்காகவும் ஒருபோதும் எனது நோயாளியை காயப்படுத்தும்படி நடக்க மாட்டேன். பெண் ஆசை, பொன் ஆசைக்கு இடம் கொடுக்க மாட்டேன். என் சிந்தனையில் கூட ஒழுங்கீனம் உதயமாகாமல் இருப்பதாக.
3 நான் உடுத்தும் ஆடைகள் நாகரிகமானதாகவும் அதேவேளையில் பார்க்க மிடுக்காகவும், நம்பிக்கை தருவதாகவும் இருக்கும். நான் எப்போதும் இனிமையான, தூய்மையான, பொருத்தமான, உண்மையான, சகாயமான, பணிவான வாத்தைகளையே பயன்படுத்துவேன். இடத்துக்கும், நேரத்துக்கும் ஏற்றபடி நடந்துகொள்வேன்.
4 எனது அறிவு புதிய பரிமாணங்களை எட்ட எப்போதும் முயற்சிப்பேன்.
5 நான் ஓர் ஆண் மருத்துவராக இருக்கும்பட்சத்தில், எப்போதும் பெண் நோயாளிக்கு அவரது கணவர் அல்லது நெருங்கிய உறவினர் முன்னிலையிலேயே சிகிச்சை அளிப்பேன்.
6 ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும்போது எனது கவனம் முழுவதும் நோயைக் குணமாக்குவதிலேயே இருக்கும். நோயாளியின் தனிப்பட்ட விவரங்களைப் பற்றியோ அவரின் குடும்ப விஷயங்களைப் பற்றியோ பேச மாட்டேன்.
7 ஒரு மருத்துவராக நான் பெற்ற அறிவையும், திறனையும் ஒருபோதும் ‘நான்’ என்ற அகந்தையுடன் வெளிப்படுத்த மாட்டேன். அதனால், பிறர் அவமதிக்கப்பட்டதாக உணரலாம்.

  • இவ்வாறு அந்த உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *