• Tue. Sep 17th, 2024

உக்ரைனில் தமிழக மாணவிகள் சிக்கி தவிப்பு..

Byகாயத்ரி

Feb 24, 2022

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி அனுசுயா மோகன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கீவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இணைய இணைப்புகள், தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். ரஷ்யா தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *