• Sun. Oct 1st, 2023

தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்

Byஜெ.துரை

May 29, 2023

தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொது குழு கூட்டத்தில் சிலம்பம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை சார்பாக சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் சிறந்த சிலம்பம் ஆசான்களை இக் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்து அவர்களை தமிழ்நாடு அரசுக்கு வழங்க இருப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு கோரிக்கையாக தமிழக அரசுக்கு வைத்தனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சிலம்பம் கழகம் மாநில தலைவர் சி.எம் சாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அகத்தியா ஞானம் பொருளாளர் அருண் கேசவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உலக சிலம்ப ஆசிரியர்கள் சங்கம் என். ஆர்.தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மற்றும் பல்வேறு சிலம்பம் சங்க உறுப்பினர்கள் உட்பட பல பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *