

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 10வது மாநில மாநாடுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் 10 – வது மாநில மாநாடு ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் நடைபெறுகிறது.மாநாட்டிற்கு தேவையான முன்னேற்பாடுகளை வெகுசிறப்பாக செய்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக,சிவகங்கையில் நாளை தொடங்கவிருக்கும் மாநில மாநாட்டுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று விருதுநகர்மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தில் இருந்து சிவகங்கை மாநில மாநாட்டிற்கு பருப்பு, எண்ணெய் மற்றும் வெடி ஆகியவை அனுப்பபட்டன.
இந்நிகழ்வினை முன்னாள் குமரி மாவட்ட தலைவரும், தற்போது விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் .ஒய்.வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னணி நிர்வாகிகள். கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
