

சட்டமன்ற தேர்தலுக்கான செலவீனத்தொகை மற்றும் மதிப்பதியத்தை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமினை தமிழகத்திலுள்ள 234தொகுதிகளிலும் புறக்கணிக்கவுள்ளோம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் எச்சரிக்கை.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பறக்கும் படை வாகனச்செலவு, எரிபொருள் செலவு போன்ற தேர்தல் செலவீனங்களை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 6மாதங்களாக வழங்காததை கண்டித்தும், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் வழங்க வேண்டிய மதிப்பு ஊதியத்தை வழங்கால் இழுத்தடிப்பு செய்யும் தமிழக அரசை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடுத்துவதற்கான சிறப்பு பணியாளர்களை நியமித்தது தொடர்பான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக அரசாணை வெளியிடாத பட்சத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு பணிகள் முகாமினை தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை புறக்கணிக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.
