

அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், சத் பூஜை விழாவுக்கு சென்றுவிட்டு ஆேட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 10 பேர் அதில் இருந்தனர்.
ஆட்டோ, கரிம்கஞ்ச்- திரிபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பதர்கண்டி என்ற கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.