• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா..,

ByKalamegam Viswanathan

Feb 12, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தீபா தலைமை வகித்தார் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எஸ் கேஜெயராமன் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைத் தலைவர் லதா கண்ணன் ஆகியோர் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர்களுக்கு மிதிவண்டியினை வழங்கினர்.

தமிழ் ஆசிரியர் கிரேஸ் பாக்கியமணி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் குருசாமி ஈஸ்வரி ஸ்டாலின் நிஷா கௌதம ராஜா பிற்படுத்தப்பட்ட நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வக்கீல் முருகன் மணிவேல் சுரேஷ் ராமநாதன் மணிபாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் உதவி தலைமை ஆசிரியை அழகுலதா நன்றி கூறினார்.