• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர்..,

ByKalamegam Viswanathan

Aug 5, 2026

தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன போஸ்டர் ஆனது பெண்களின் பெயரை பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை இரட்டை அர்த்தத்தில் பேசி அவன் வைத்ததை ஏற்க முடியாது எனவும் எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களின் பற்றி தவறாக பேசியது எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் என பெண்கள் நம் நாட்டின் கண்கள் என மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் தலைமையகம் சார்பாக மதுரை மாநகர் முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அனைத்து பகுதிகளிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.