தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம், தேனி கிளையின் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜன.8) வீரபாண்டியில், இராம இராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. தமிழ்நாடு வன அலுவலர் சங்க தென்மண்டல அமைப்பு செயலாளர் K.J.சாந்தகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் G.ஜெயக்குமார் (தேனி கிளை), பொருளாளர் முருகேசன் (தேனி கிளை) முன்னிலை வகித்தனர். செயலாளர் S.பாபு (தேனி கிளை) வரவேற்றார். தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநில தலைவர் K. சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தேனி மாவட்டத்தில் நீண்ட நாட்கள் காலியாக இருந்த தேனி மாவட்ட தலைவர் பதவிக்கு தேனி வனச்சரகர் K.J. சாந்தகுமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். சங்கம் சார்பாக மாநில மாநாடு விரைவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இதுபோல் மாவட்ட வாரிய கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கொடைக்கானல் கிளையைச் சேர்ந்த மாவட்ட தலைவர் A. டேவிட் ராஜா, துணைத் தலைவர் J.ஜெயச்சந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டம் அரசு விதித்த கொரோனா விதிகளை கடைபிடித்து நடந்தது. மாவட்ட இணைச் செயலாளர் ஓ.வி.பாண்டி நன்றி கூறினார்.