• Wed. Dec 11th, 2024

தமிழ்நாடு – கருணாநிதி நாடு என மாற்றப்படலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ByA.Tamilselvan

May 2, 2022

தமிழ்நாடு என்ற பெயர் விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றப்படலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகை மரணம்,இருமொழக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்
அம்மா உணவகத்தைக் குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது. பொதுமக்களே இதை விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம்.தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. திமுக மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான்.
இதையடுத்து, நடிகை மரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை. மடியில் கனம் உள்ளவர்களுக்கு தான் பயம் இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.