• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

இன்று மாலை முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

ByA.Tamilselvan

Mar 9, 2023
TN Government

பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இன்று மாலை5மணிஅளவில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
தமிழக அரசின், 2023 – 24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வரும், 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்நிலையில், இன்று மாலை, 5:00 மணிக்கு, தமிழக அமைச்சரவை கூட்டம், தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். இக்கூட்டத்தில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது. இது தவிர, தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, சட்டசபை கூட்டத் தொடரில், புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வருவது, வெளி மாநிலத் தொழிலாளர் விவகாரத்தில், அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவை குறித்தும் ஆலோசித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.