மதுரையில் இன்று காலை வழக்கம் போல் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் தாமதமானதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மதுரையில் தினம்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 1. 80 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக மாற்றப்பட்டு மதுரை முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ஆவின் பாலகத்தில் இருந்து பால் எடுத்துச் செல்ல தாமதமானதால் 2 மணி நேரம் வரை பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனை சீர் செய்ய வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.