• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

ByP.Kavitha Kumar

Feb 18, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த கருத்து கேட்டபின் அதை, பட்ஜெட்டில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்..வேளாண் நிதிநிலை அறிக்கை மார்ச் 15-ம் தேதி தாக்கல் செய்யப்படும். 2025- 26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இறுதி முழு பட்ஜெட் இது என்பதால் இதை அரசு மிக முக்கிய பட்ஜெட்டாக கருதுகிறது. எனவே மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.