• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

திருக்குறள் பாடி குடமுழுக்கு நடத்தி வைத்த சிவாச்சாரியார்கள். வர்ணனை செய்த 12 வயதுள்ள பள்ளி மாணவி..,

Byமுகமதி

Jul 5, 2026

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருக்குறளை எடுத்துச் சொல்லி அதற்கு விளக்கமும் கொடுத்து குடமுழுக்கு நடத்தி வைத்த நிகழ்ச்சியை மக்கள் பெரிதும் வரவேற்று இருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு பகுதியில் காரைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இணைந்து குறுந்தடி அய்யனார் கோவில் என்றொரு கோவிலை நிர்மாணித்து பூஜித்து வருகிறார்கள். அந்தக் கோவிலுக்கு இன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் பிறந்த மக்களும் மாவட்ட பூசாரிகள் சங்கத் தலைவர் மணி தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் சிவாச்சாரியார்களை கொண்டு ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வேங்கட குளத்தில் பிறந்து வல்லத்திரா கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் 12 வயது உள்ள பவானி என்ற மாணவி நேரடி வர்ணனை செய்தார். கோவில் விழாக்களில் மற்றும் குடமுழுக்கு போன்ற நிகழ்வுகளில் வர்ணனை செய்வதற்கு அசாத்திய திறமையும் வாக்கியங்களை கையாளும் விதமும் தேவை என்கிற நிலையில் பள்ளி மாணவியின் வர்ணனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதேபோல் புனித நீர்க் குடங்களை சுமந்து சென்ற சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்தின் கலசங்களில் புனித நீர் ஊட்டுவதற்கு முன்பாக ரவி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் வேத மந்திரங்கள் முழங்குவதை காட்டிலும் திருக்குறளில் சொல்லி அதற்கான விளக்கமும் எடுத்து விளக்கி உடனே ஊற்றுவது சாலச் சிறந்தது என்று கருதி அதையே செய்தனர்.

திருக்குறளும் திருக்குறளுக்கான விளக்கத்தையும் கேட்டுக் கொண்ட பக்தர்கள் இவ்வாறு ஒரு குடமுழுக்கு நடத்தி இருப்பதை பெரிதும் வரவேற்று மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களிலும் சமஸ்கிருத மொழியிலேயே மந்திரங்களை கேட்ட மக்களுக்கு திருக்குறளும் திருக்குறள் விளக்கமும் அதற்கான ஆகம விதிகளையும் கேட்டு மகிழ்ந்தனர்.