• Sat. Feb 15th, 2025

தமிழக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் பேட்டி…

டங்ஸ்டன் சுரங்க பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அந்த மகிழ்ச்சியை மக்களோடு கொண்டாடுவதற்காக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரைக்கு வருகிறார். மேலூர் அருகில் இருக்கும் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அவருடன் இந்த பிரச்சனைக்கு முனைப்பு காட்டி முழுமையாக தீர்த்து வைத்திருக்கின்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் வருகிறார். இந்த பிரச்சனை வெற்றியடைந்ததனால் இது எங்களால் தான் நடந்தது என்று திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் பாஜகவை பொறுத்தவரை இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் சொல்லவில்லை. அந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். அந்த ஊர் மக்களுக்கு அந்த சுரங்கம் அங்கே அமைக்கப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி தெளிவான புரிதல் இருந்தது. தமிழக அரசுக்கு அந்த புரிதல் இல்லை. தமிழக அரசு மத்திய அரசுக்கு இதைப்பற்றி எதுவும் விளக்கவில்லை. இது பற்றி மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டியுடன் அந்த கிராம மக்கள் விளக்கி பேசினார்கள். அதைப் புரிந்து கொண்டு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அவர்களுடைய போராட்டம் வன்முறை இல்லாமல் அறவழியில் நடந்த போராட்டம். ஆனால் அந்தப் போராட்டத்தை திசை திருப்பி தேச விரோத போராட்டமாக மாற்றி விட வேண்டும் என சிலர் முயற்சி செய்தனர். ஸ்டெர்லைட் போராட்டம் போன்று இதைக் கொண்டு போக வேண்டும் என சில விஷமிகள் முயற்சி செய்தார்கள். சாதாரண கிராம மக்கள் டெல்லியில் சென்று அதிகாரத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களை சந்தித்து தங்களுடைய குறைகளை கூற முடியும் என்ற நிலையை பிரதமர் மோடியின் அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. எனவே டங்ஸ்டன் பிரச்சனை முழுமையாக தீர்ந்ததற்கு காரணம் அந்த கிராம மக்களும் அவர்கள் கட்டமைத்த அமைதியான போராட்டம் தான்.

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவினர் தேர்தலை புறக்கணித்திருக்கிறோம். அதனால் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. அங்கே போட்டியிடுகிற திமுக நாம் தமிழர் கட்சி இரண்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளாத கட்சிகள். எனவே தொண்டர்களுடைய மனசாட்சி படி ஓட்டு போடலாம்.

சீமானுக்கு பின்னாடி பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்,
கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்ற பாட்ஷா இறந்த போது சீமான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலந்து கொண்டு பாட்ஷா என்னுடைய அப்பா என்று ஆதரித்து பேசினார். அப்படி என்றால் சீமானுக்கு பின்னாடி திமுக இருக்கிறதா,?
ஈவேரா பற்றி எதிர்த்து பேசினால் பின்னாடி பிஜேபி இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் தீவிரவாதிக்கு பின்னாடி இருக்கக்கூடியவர்களை எப்படி அழைப்பார்கள்.
சட்டமன்றத் தேர்தல் வேலைகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் அமைப்பு ரீதியான தேர்தல்கள் முடிவுக்கு வருகிறது. எல்லா மாவட்டத் தலைவர்கள் தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்தியா முழுவதும் மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அதன் பின்னர் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனது கணிப்பு சரியாக இருந்தால் பிப்ரவரி மாதம் மாநில இருந்து தேசியம் வரை முழுமையான நிர்வாகம் அமைக்கப்படும்.

அண்ணாமலை மாற்றப்படுவாரா?

பாஜகவை பொறுத்தவரையில் மாநில தலைவர், தேசிய தலைவர், மண்டல தலைவர் யாராக இருந்தாலும் இரண்டு பருவத்திற்கு மேல் இருக்க முடியாது. இது ஒன்றும் திமுக இல்லை. இப்ப எதுக்கு எடுத்து அடுத்த திமுக தலைவர் யார் என்று திமுகவில் கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கே தெரியும், அடுத்த திமுக தலைவர் யார் என்று? அதற்கு அடுத்த தலைவர் யார் என்று தெரியும். இப்போது தான் அவர் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறாராம். துரைமுருகனே கோபாலபுரத்து அடிமை என்று தன்னை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்.

பாஜகவை பொறுத்தவரை அப்படி அல்ல. பாஜ கட்சியை பொறுத்தவரை மாநில தலைவர்களாக சிபி ராதாகிருஷ்ணன், இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், ஆகியோர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். அண்ணாமலையை பொறுத்தவரை அவருக்கு ஒரு பருவம் முடிந்திருக்கிறது. அவருக்கு இரண்டாவது பருவத்தை கொடுக்கிறார்களா என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும்.

அதிமுகவை திருப்தி படுத்துவதற்காக மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்..,
நிபந்தனையின் அடிப்படையில் நாங்கள் கட்சி நடத்தவில்லை. அதிமுகவில் யார் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதை அதிமுக தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள். பிஜேபி முடிவு செய்ய முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு இறையாண்மை இருக்கிறது . பிஜேபியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி முடிவு செய்யும்.

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் கூடுதலாக இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோர் இருக்கின்றார்கள் என்றார்.

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன வேண்டும் என அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசாங்கம் எதுவும் கேட்டதில்லை. பாராளுமன்ற கேண்டினில் போயி வடை,போண்டா, பஜ்ஜி எல்லாம் சாப்பிடுகிறவர்கள் அமைச்சர்களையோ,நிதி அமைச்சரையோ, பிரதமரையோ பார்த்து எங்களுக்கு இன்னென்ன திட்டங்கள் வேண்டும் என கேட்டு இருக்கிறீர்களா?
அப்படி நீங்கள் கேட்பதாக இருந்தால் பாஜக தமிழக பாஜக உங்களுடன் வந்து நாங்களும் கேட்கிறோம். 45 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு 9 ரயில்வே திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்தார். அமைச்சர்களோ முதலமைச்சரோ தமிழ்நாடு சார்பாக நன்றி தெரிவித்தார்களா? டங்ஸ்டன் விஷயத்திலோ ஓடிப்போய் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள். நீங்கள் கேளுங்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நாங்களும் உங்களுடன் வந்து கேட்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.