• Thu. Apr 24th, 2025

தமிழ்நாடு வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!

ByP.Kavitha Kumar

Mar 15, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2025-26 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் 2025 – 2026-ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆபிரகாம், சர்க்கரை துறை இயக்குனர் அன்பழகன் வேளாண்மை இயக்குனர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வீ.கீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று 2025-26 ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

கரும்பு, முந்திரி, தென்னை, காய்கறிகள், நீர்ப்பாசனம், விவசாய குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வீ.கீதாலட்சுமி நூலை பரிசாக வழங்கினார்.