• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

டேலண்ட் படப்பிடிப்பு தொடக்கம்

Byதன பாலன்

Dec 29, 2022

சில்பகலா புரடக்க்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் “டேலண்ட்” படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 9 அன்றுகேரளாவில் துவங்கியது.இதில் ராசியா மற்றும் பிரான்சிஸ் மோதும் கால் பந்தாட்ட போட்டி கேரளாவில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் படமாக்கப்பட்டது..இப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது இதில் நாயகியாக ராசியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு ,தினேஷ் ,கார்த்திக் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும்
இப்படம் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி நான்காம் நாள் பாண்டிச்சேரியில் துவங்க உள்ளது..இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் அலெக்ஸாண்டர் ,இசை அம்ப்ரோஸ் .