துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற தனுஷ் – செல்வராகவன் கூட்டணி புதிதாக இணைந்திருக்கும் படம் ‘நானே வருவேன்’. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது, மற்றொரு கதாநாயகியாக எல்லி அவுர் ரம் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்தியில் வெற்றிபெற்ற குயின் படத்தின் தமிழ் ரீ-மேக் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்திருக்கிறார் எல்லி அவுர் ரம். ஆனால் இந்தப் படம் இதுவரை திரைக்கு வரவில்லை.
