• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சிவ ராத்திரி முன்னிட்டு சீனி கிழங்கு விற்பனை..,

வருகின்ற ஞாயிறு அன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் தேச பந்து மைதானத்தில் சீனி கிழங்கு, சிந்தாமணிகிழங்கு, விற்பனைக்காக அதிக அளவில் விற்பனைக்காக குவிந்துள்ளது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்* அழகர் கோவில், அழகியநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து சீனி கிழங்கு மற்றும் சிந்தாமணி கிழங்கு அதிக அளவில் வர துவங்கி உள்ளன.பொது மக்கள் சிவராத்திரிக்கு மொச்சைபயறு, கிழங்கு போன்றவை தங்கள் இல்லங்களில் சமைத்து இறை வழிபாடு செய்து கோவில்களில் இரவு முழுவதும் கண் விழித்து, ஓம் நமசிவாய என்ற மந்திரசொல்லை உச்சரித்தும், தாள் மற்றும் நோட்டுகளில் எழுதியும் அன்று முழுவதும் தங்களை இறை நம்பிக்கையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.