• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் கீர்த்தனா பெயரை ஏன் முதலில் போட்டீர்கள் என அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

ByRadhakrishnan Thangaraj

Jun 26, 2026

சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அனைத்தும் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் அங்கிருந்து அங்கு நடைபெற்று சாலை வழியாக 5 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உலகத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் மேலையும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் அதற்கு கீழே அச்சடிக்கப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரியிடம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய என் பெயரை முதலாவதாக போடாமல் எப்படி நீங்கள் என் பேரு கீழே போடலாம் என கேட்டு அதிகாரிகளை கண்டித்துள்ளார். உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு அதிகாரிகளிடம் அரசு விதிமுறைகளை பின்பற்றி இது போன்ற நிகழ்ச்சிகளில் பெயர்கள் பதிவு செய்ய வேண்டும் என எச்சரித்தார்.

இந்த நிலையில் இராஜபாளையம் மற்றும் பல பகுதிகளில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகளை சமூகத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாக கூறி அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்தார்.