• Fri. Jun 9th, 2023

ஓடும் ரயிலில் இறங்கிய பயணி உயிர் தப்பிய நிகழ்வு…

Byகாயத்ரி

Mar 4, 2022

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் மெதுவாக கிளம்பி பின்னர் படிப்படியாக வேகம் எடுத்துச் செல்வது பதிவாகி உள்ளது. அப்போது அந்த ரயிலில் இருந்து பயணி ஒருவர் இறங்க முற்படுகையில் தவறி விழுந்து இழுத்து செல்லப்படும் நிலை ஏற்பட்டது.இதனை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியதால் அந்த இளைஞர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *