• Sat. Apr 20th, 2024

கதாநாயகனாக தொடர ஆசைப்படும் காமெடி நடிகர் சூரி

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதைநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் விடுதலை கெளரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட விடுதலை திட்டமிட்ட நாட்களையும், பட்ஜெட்டையும் கடந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான 50 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளது

ஒரு வழியாக வெற்றிமாறனிடம் இருந்து விடுதலை பெற்று திரையரங்கில் வெளியிடப்படுவதற்கான நாள் குறிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது மார்ச் 31 அன்று வெளியாகும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்

R.S.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பிரகாஷ்ராஜ், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஶ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை வடிவமைக்க,ஒளிப்பதிவு .செய்திருக்கிறார் வேல்ராஜ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் முதல் கட்டமாக விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, மற்றும் படத்தில் நடித்துள்ள திரைக்கலைஞர்கள் கலந்துகொண்டார்.விழாவில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி காமெடியானாகவும், கதாநாயகனாகவும் நடிப்பேன் இரண்டும் நடிப்புதானே எனதனது கதாநாயகன் ஆசையை வெளிப்படுத்தும் வகையில் சூரி பேசியதாவது

“ஒரு காமெடியனாக நிறைய மேடையேறி இருக்கேன். முதல் முறையாக ஒரு கதைநாயகனாக இந்த மேடை எனக்குக் கிடைத்திருக்கிறது.எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் இப்படத்தில் ஐயாவின்(இளையராஜா)இசையில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வெற்றிமாறன் அண்ணனுக்கு நான் மட்டுமல்ல என் குடும்பமே சேர்ந்து நன்றி சொல்ல வேண்டும்.சினிமாவில் சக நடிகர்களை, டெக்னீசியன்களை வாழ்த்தி தன்னைவிட அதிகமாக வளர்த்துவிடுபவர் மாமா விஜய்சேதுபதி. இப்படி யாரையும் நான் பார்த்ததில்லை.படத்தின் காட்சிகளைப் பார்த்துட்டு என்னை வாழ்த்திப் பாராட்டினார். சினிமாவில் வாய்ப்பு தேடும் போதிலிருந்து நானும் விஜய் சேதுபதியும் நெருக்கமான நண்பர்கள்.

அப்போது ஒரு நல்ல காமெடி நடிகனாக வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பேன். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி என்னிடம் மாமா ‘நீ காமெடி நடிகன் என்று நீயாக முடிவு செய்யாதே. நீ ஒரு நல்ல நடிகன்’ என்றார்.எப்போதும் அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார். விடுதலை படத்தில் நான் நடிகனாக நடிக்கும்போது படப்படிப்பில் வெற்றி சாரிடம் நான் சொல்ல வேண்டிய நன்றியை எனக்குப் பதிலாக சொன்னார்” என்றார்.

இப்படத்திற்குப் பிறகு நான் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன் என்று பலர் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நகைச்சுவை நடிகன் என்றாலும் கதாநாயகன் என்றாலும் நடிப்பேன். நான் எப்போதும் ஒரு நடிகனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *