• Wed. Feb 19th, 2025

ஆல் இந்தியா குட்வேல் ஹேர்& பியூட்டி அசோசியன்ஸ் சார்பாக மகளிர் தின விழா

Byஜெ.துரை

Mar 9, 2023

சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இந்தியா குட் வெல் ஹேர்& பியூட்டி அசோசியன்ஸ் சார்பாக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அசோசியன்ஸ் நிறுவன தலைவர் சித்ராகுமரேசன் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் A.M. விக்கிரமராஜா சார்பில் மாநில துணைத்தலைவர் உத்திரகுமார் கலந்து கொண்டார்.மற்றும் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்ற சங்க பொருளாளரும் வழக்கறிஞருமான தன்ராஜ்.செந்தூர் பாறை ஆகியோர்முன்னிலை வகித்தனர். யாஸ்மீன், அட்வகேட் சிவா, ஆகியோர்சிறப்பு விருந்தினராக கௌரவிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து பெண்களுக்கு மகளிர் சுயதொழில் முனைவோர் பயிற்சியும் இலவசமாக வழங்கபட்டது. அதன் பின்பு கேக் வெட்டி கொண்டாடினர்.இந் நிகழ்ச்சியின் போது அசோசியன்ஸ் சட்ட வல்லுனர்கள் அட்வகேட் லாவண்யா, அட்வகேட் ரேகா, அட்வகேட் தீபா, மற்றும் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.