


சர்வதேச மகளிர் தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேவேளையில் மகளிர் உரிமைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது சி ஐ டி யு மாதர் சங்கம் விவசாய சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா யொட்டி மகளீர் உரிமைகள் மற்றும் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்றது.சேலம் கோட்டைப்பகுதிருந்து துவங்கிய இந்த பேரணியில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மகளீர் உரிமைகளையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி கோசங்களை எழுப்பி படி வந்தனர்
தொடர்ந்து ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் சட்டமன்றம் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.உழைக்கும் பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் விவசாய தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலை வாழ உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும் நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும் தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பை ரத்து செய்திட வேண்டும் கோடிகணக்காண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்


