நடிகர் அஜித்தின் துணிவு படத்தை பின்னுக்கு தள்ளிய சன்னிலியோன் நடித்த ஓ மை கோஸ்ட்’ படம் ..நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனையடுத்து படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே புக் மை ஷோ தளத்தில் 3.40 லட்சம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்திருந்தனர். , இதை விட விஜயின் வாரிசு படத்திற்கு குறைவான எண்ணிக்கை பெற்றிருந்தது.
இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பே இல்லை துணிவு படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்று கூறி வந்தனர். இதனையடுத்து அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அது என்னவென்றால், அஜித்தின் ‘துணிவு’ படத்தைவிட சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படம் புக் மை ஷோ தளத்தில் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது. அதன்படி, இந்த படத்தை பார்ப்பதற்கு 4.30 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் துணிவுக்கு 3.40 லட்சம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்திருந்தனர். எனவே இதில் அஜித்தை சன்னிலியோன் பின்னுக்கு தள்ளியுள்ளார்.