• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை வட்டாரம் ஊத்துப்பட்டி கிராமத்தில் “கிஷான் கோஸ்தி- வயல் தின விழா”..,

ByK Kaliraj

Jul 29, 2026

வேளாண்மைத் துறை விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் வெம்பக்கோட்டை வட்டாரம் ஊத்துப்பட்டி கிராமத்தில் “கிஷான் கோஸ்தி- வயல் தின விழா” தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் முத்தையா தலைமையாற்றினார் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) லதா, சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார், தோட்டக்கலை உதவி இயக்குநர் குணசீலி தொட்டக்கலை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாகவும், பந்தல் காய்கறிகள் சாகுபடி, காய்கறி பழப்பயிர்களில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம் மற்றும் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார்.

மேலும் பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் அவர்கள் பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் காணும் முறைகள், பருத்தி, மக்காச்சோளம், பயறு உள்ளிட்ட பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களைத் தடுக்கும் வழிமுறைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது தொடர்பாக . காவியா டிரோன் தொழில்நுட்பம் தொடர்பாக விவசாயிகளுக்கு வயல் வழிப் பயிற்சி அளிக்கப்பட்டது

மேலும், விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அலுவலர்கள் பதிலளித்து, அறிவியல் வேளாண் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்த பயிற்சி முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், மேலும் உதவி வேளாண்மை அலுவலர் கருப்பசாமி வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்து நன்றியுரை கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ் மற்றும் மாரி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்