• Wed. Apr 24th, 2024

எந்த படத்திற்கு பாடுகிறோம் என தெரியாமல் பாடியது ஏ…சாமி ஐயாசாமி… பாடல்

ஏ சாமி… ஐயா சாமி… ’ என எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருக்கும் புஷ்பா படத்தின் தமிழ் பதிப்புக்கு குரல் கொடுத்தவர், மக்களிசை பாடகி ராஜலட்சுமி. ‛ஏ மச்சான்… சின்ன மச்சான்…’ என அடையாளப்படுத்தப்பட்டு வந்த ராஜலட்சுமி, ‛ஏ சாமி….’ என மாற்றப்பட்டிருக்கிறார். அந்த பாடல்கள் பாட கிடைத்த வாய்ப்பு என்ன, எப்படி கிடைத்தது என்பது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளனர்.

அவர் அளித்த பேட்டி இதோ பிற மொழி படங்கள்பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. விஜய் சூப்பரில் தான் பிற மொழி படங்கள் பார்க்க தொடங்கினேன். அதில் தான் அல்லு அர்ஜூன் படங்களை பார்த்தேன். ஒருநாள் புஷ்பா படம் வரவிருப்பதாக செய்தி பார்த்தேன். நான் ஊரில் இருந்த போது, தேவி ஸ்ரீபிரசாத் சார் அலுவலகத்தில் இருந்து அழைத்தார்கள்.

ஒரு பாடல் உள்ளது வாங்க, ட்ரை பண்ணி பார்க்கலாம் என்றனர். நான் ஊரில் இருக்கிறேன் என்றேன்; சரி, வந்ததும் வாங்க என்றார்கள். இரண்டு நாள் டைம் கேட்டு, சென்னை திரும்பியதும் அங்கு சென்றேன். ஒரு தெலுங்கு பாடலை போட்டு காட்டினார்கள். இதை தான் தமிழில் பாட வேண்டும் என்றார்கள். எனக்கு இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என தோன்றியது. என்ன படம், எதற்கான பாடல் என்றெல்லாம் தெரியாது.

என்னை ஒரு பல்லவியை பாடச் சொன்னார்கள். இரண்டு மணி நேரம் அதை பாடினேன். திடீரென தேவிஸ்ரீபிரசாத் வந்தார், நான் பாடியதை பார்த்துவிட்டு ‛நல்லா இருக்கு… நீங்களே பாடுங்க… கொஞ்சம் பெரிய படம் ராஜீ… நாம நல்லா பண்ணனும்’ என்றார்
உங்க வீடு பக்கத்துல தானே இருக்கு… டீ குடிச்சுட்டு வந்து பாடுங்க.. சாப்பிட்டு வந்து பாடுங்க… எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோங்க… ஆனா நல்லா பாடிடுங்க…’ என தேவிஸ்ரீபிரசாத் சார் சொல்லிட்டார். இந்த வாய்ப்பை விட்டுட கூடாதுடானு நானும் மெனக்கெட்டேன்.

மேக்கிங் எடுப்பார்கள் என கனவில் கூட நினைக்கவில்லை. அதுவரை புஷ்பாவிற்கு தான் பாடியிருக்கேன் என, எனக்கு தெரியாது. பாடல்கள் 5 மொழியில் ரிலீஸ் ஆனாலும், தெலுங்கு அளவிற்கு ஓப்பனிங்கில் வரவேற்பு இல்லை. யாருக்கும் அந்த பாடல் தெரியவில்லை. கச்சேரியில் கூட பாடினேன், யாருக்கும் அது தெரியவில்லை. அப்புறம் பார்த்தால், பாடல் எங்கேயோ போய்விட்டது.


நான் எத்தனையோ சாமி பாடல்களை மேடையில் பாடியிருக்கேன்ஆனால் ,இந்த சாமி பாடலுக்கு கிடைத்த வரவேற்பு வேறு மாதிரி இருந்தது. புரட்டாசியில் நான் பெருமாளுக்கு அர்ப்பணிப்பேன். அந்த நேரத்தில் இந்த பாடல் வாய்ப்பு வந்தது. எப்படி இருக்குமோ என சென்றேன்… அங்கே போய் பார்த்தால், எல்லாமே சாமி என்றே இருந்தது. ஒரே ஹேப்பி…!


முதலில் பாடல்கள் பாடும் போது, ஏதாவது ஒரு கண்டண்ட் எடுத்து அதை பாடும் போது, அதற்கு சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு பெரிய மனஉளைச்சலாகவும் இருந்தது. எதை செய்தாலும், எதை பேசினாலும் விமர்சிக்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படி தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். வெளி உலக விமர்சனங்களை மூளையில் ஏற்றக்கூடாது. பாசிட்டிவ் விமர்சனங்களை படித்து மகிழ்ந்து கடந்துவிட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *